2007ம் வருடத்தில் Paul Collingwood தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்ததாக, இங்கிலாந்து அணியின் இந்நாள் ஒருநாள் போட்டிகளின் தலைவர் இயோன் மோர்கன் இலங்கை போட்டிக்கான சுற்றுப் பயணத்தில் டெய்லி மெயில் இணையத் தளமூடான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது 2007இல் அணியில் இருந்த சவால்மிக்க வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் டீ.எம்.டில்ஷான் ஆகியோர் இலங்கை அணியில் இல்லாமையானது பெரும் இழப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், இலங்கை அணியின் மேற்குறித்த வீரர்கள் இல்லாமையானது தற்சமயம் அணிக்கு பெரும் இழப்பீடாக இருப்பதாகவும் மோர்கன் தெரிவித்திருந்தார்.
அவ்வாறே, இங்கிலாந்து அணியானது முழுமையாக மாறியுள்ளதோடு, எச்சந்தர்ப்பத்திலும் மனநிலையில் திடசங்கமாக இருப்பதாகவும் சில சமயம் தமது அணி முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு இடையிலான 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை தேசிய மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.