(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவார்கள் என்பதை இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் சாதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று தெரிவிக்கையில்;
எமது இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும்போது எந்த கவலையும் அடையாதவர்கள் சஹ்ரானின் சொந்தக்காரர்கள் என்று தேரர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அதேபோல இலங்கையர்கள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவார்கள் என்பதை மாலிங்க நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.