இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(22) பி.சரவனமுத்து மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுற்றமையும் குறிப்பிடத்தக்கது.