2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் கரீ அஜ்மல் என்பவர் அமெரிக்க – ஆப்கானிஸ்தானின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் லஷ்கார் ஈ ஜெங்கி அமைப்பின் தலைவராக அறியப்படும் இவர், பல தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என கருதப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூர் நகரில் கடாபி மைதானத்திற்கு அருகில் இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மஹலே ஜயவர்தன, குமார் சங்ககார, அஜந்த மெண்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவித்தாரன மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.