இலங்கை அணி வீரர் சந்திமாலினை வீழ்த்த மிஸ்ரா வியூகம்

இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமாலின் ஓட்ட குவிப்பை தடுக்க புதிய திட்டத்தை பின்பற்றப் போவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இதில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சந்திமால் 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் கொழும்பில் நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் சந்திமாலை கட்டுப்படுத்த தான் புதிய திட்டத்தை கையாளப் போவதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “எங்களுடைய துடுப்பாட்டக்காரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திறம்பட விளையாடக்கூடியவர்கள். எனவே சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் தடுமாறியதாக நான் நினைக்கவில்லை.

காலி டெஸ்டின் 2வது இன்னிங்சில் நாங்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக விளையாடியிருக்க வேண்டும். அந்த டெஸ்டில் தோற்றாலும் எங்களது மனவலிமை குறையவில்லை.

மேலும், சந்திமாலின் ஓட்டகுவிப்பை தடுக்க திட்டம் வகுக்கப்படும். இதற்காக அவரின் ஆட்ட வீடியோவை பார்த்தோம். எங்களது திட்டத்துக்கு தகுந்தபடி களத்தடுப்பு அமைத்து பந்து வீச்சில் தாக்குதல் தொடுப்போம்” என்று கூறியுள்ளார்.

(riz)