முரளி – வோன் கிண்ணம் ஊடாக நடைபெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி ஆட்ட நாளாக நேற்றைய தினம்(17) அமைந்திருந்தது.
குறித்த நேற்றையதின ஆட்டத்தில் இலங்கை அணியினர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என பெற்று வெற்றிவாகையினை சூடியிருந்தனர்.
நேற்றையதின போட்டியின் பரிசளிப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் பெயர் குறிப்பிட்டிருந்தும், இறுதியில் அவரால் கலந்து கொள்ள முடியாதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
முரளிக்கு இவ்வாறு முன்கூட்டியே அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் சமயம் பார்த்து இந்தியா பயணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.