இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு இணைந்து ஆரம்பிக்கும் அவசர அம்புலன்ஸ் சேவை நாளை காலிமுகத்திடல் அருகில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
‘1990’ எனும் இலக்கத்துக்கு அழைத்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக 29 ஆம் திகதி முதல் தென் மாகாண காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதோடு, இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவசர தேவையின் போது இலவச அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.