இலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் இன்று.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும்போது 2 விக்கட்டுகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்திருந்தது.

இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது பாகிஸ்தான் தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து முன்னதாக 297 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸிற்காக பெற்றிருந்தது.

1

2