(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு தினத்திற்கான பிரதான நிகழ்வுகள் இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் சவேந்திர சில்வா தலைமையில் இன்று(10) முற்பகல் இடம்பெறுவுள்ளது.
துணிச்சல், அர்ப்பணிப்பு போன்ற சிறந்த பதிவுகளைக் கொண்ட இலங்கை இராணுவமானது தேசத்தின் மிகவும் வலிமையானதும், சிறந்த சேவையையும் நாட்டிற்கு வழங்கி கொண்டுள்ள இத்தருணத்தில் இன்று(10) தனது 70 வருடத்திற்கு தனது காலடியை எடுத்து வைக்கின்றது.
பிரிகேடியர் ஆர். சின்க்ளேரின் கட்டளையின் கீழ் இலங்கை இராணுவமானது 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி நிறுவப்பட்டது.
பின்னர் தியதலாவையில் தனது சொந்த இராணுவ அகடமி நிறுவப்பட்டதன் மூலம், இலங்கை இராணுவத்தின் முதல் இராணுவ தளபதியாக பிரிகேடியர் அன்டன் முத்துகுமரு நியமிக்கப்பட்டார்.
கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை இராணுவமானது 23 இராணுவ தளபதிகளை உள்ளடக்கி திறம்பட சேவைகளை மேற்கொண்டு இராணுவத்தை வளர்ச்சியடைய செய்துள்ளது.
அத்துடன் 24 படையணிகளை இராணுவத்தில் விரிவுபடுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து இனங்களின் இதயங்களிலும் இடம் பிடித்து நாட்டின் சிறந்த பாதுகாவலர்களாக இலங்கை இராணுவம் விளங்குகின்றது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தேசிய பேரழிவுகள், அவசரநிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒப்பிட முடியாத சேவைகளை இராணுவம் மேற்கொண்டு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிறந்த பணிகளையும், நாட்டின் தேசிய பாதுகாப்பு நிமித்தமும், மனிதாபிமான நடவடிக்கை திட்டங்களிலும் நாட்டிற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-இராணுவ ஊடகப் பிரிவு-