மாலியின் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலியான அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த சடலங்களை இன்று(02) நாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தபோதும், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி மாலியில் இலங்கை இராணுவத்தினரின் ட்ரக் வண்டி மீது தொலைதூரத்திலிருந்து அதி நவீன மற்றும் அதிசக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 இராணுவ உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.