இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குறித்து தாய்லாந்து விமான நிலையத்தில் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இவ்வாறு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக “பேங்கொக் போஸ்ட்” செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுடன் சட்டவிரோத குடியேற்றிகள் மற்றும் குற்றவாளிகள் என பலரும் நாட்டுக்குள் பிரவேசிக்ககூடும் என அந்நாட்டின் குடிவரவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக “பேங்கொக் போஸ்ட்” வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.