(FASTNEWS | COLOMBO) – ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தலைமை தாங்கும் லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் தினம் குறித்து தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(22) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த லசித் மாலிங்க;
“2020 ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகள் தான் தனது இறுதிப் போட்டியாக அமையும். அதற்கு பின்னர் நான் சர்வதேச மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.