இலங்கை – ஓமான் இரட்டை வரிவிதிப்பு தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்து…

இலங்கை மற்றும் ஓமான் இரட்டை வரி விதிப்பை தவிர்த்தல் மற்றும் வரிஏய்ப்பைத் தடுத்தல் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

இருபக்க ஆலோசனைக்கான இலங்கை தூதுக்குழு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பிரசாட் காரியவசம் மற்றும் ஓமானின் தூதுக்குழு இராஜதந்திரத்திற்கான கீழ் செயலாளர் மற்றும் ஓமான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முதுகலைத் திணைக்கள தலைவர் மஹ்மூத் அவாத் அல் ஹஸன் ஆகியோரால் வழிநடத்தப்பட்டன.

இந்த சந்திப்பின்போது, இலங்கை மற்றும் ஓமான் மேலும் உறுதியான உயர் இருபக்க அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மீள் உறுதிப்படுத்தின.

வர்த்தகம், சுற்றுலா, குடிவரவு, குடியகழ்வு, ஊழியர் மற்றும் மனிதவள பயிற்றுவிப்பு, பாதுகாப்பு, விவசாயம், மேற்படிப்பு மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு அவசியமான பரந்த விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டன.

மேலும், மீன்பிடி, விளையாட்டுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு என்பன எதிர்காலத்தில் சாத்தியமான ஒத்துழைப்புக்கான துறைகளாக இனங்காணப்பட்டன. மேலும் இலங்கை தேசிய வணிக அறை மற்றும் ஓமான் வணிக மற்றும் கைத்தொழில் அறை ஆகியவற்றுக்கிடையிலான இலங்கை – ஓமான் வணிக சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு உதவி புரிவதற்கும் இதன்போது உடன்பட்டனர்.

இரு தரப்பினரும் பிராந்திய ரீதியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பல்தரப்பு ரீதியான ஆர்வங்களை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது ஓமான் பிரதிநிதிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

ஓமான் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பதற்கான அழைப்பினையும் விடுத்துள்ளனர்.