இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கெப்டனாக இருப்பர் மெத்யூஸ். ஆல்ரவுண்டரான இவர் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன், சிறப்பாக பந்தும் வீசியும் வருகிறார்.
கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை பாராட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
இதில் மெத்யூஸ் நான்கு விருதுகள் பெற்று அசத்தியுள்ளார். இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதோடு, சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன், சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த ஒருநாள் போட்டியின் ஆல்ரவுண்டர் ஆகிய விருதையும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் சிறந்த வீரருக்கான விருதை பெற்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2-வது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது ஹெராத்திற்கும், சிறந்த ஒருநாள் பந்து வீச்சளார் விருது அஜந்தா மெண்டீசுக்கும், சிறந்த டி20 பேட்ஸ்மேன் விருது குஷால் பெரேராவிற்கும், டி20 சிந்த பந்து வீச்சாளர் விருது நுவான் குலசேகராவிற்கும் கிடைத்துள்ளது.
மேலும், இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது குஷால் பெரேராவிற்கும், மக்கள் தேர்வு விருது குமார் சங்கக்காரவிற்கும் கிடைத்துள்ளது.
கடந்த 2014-ம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வீரர்களின் செயல்படு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த காலத்தில் மெத்யூஸ் டெஸ்ட் போட்டியில் 1160 ரன்களும், 18 ஒருநாள் போட்டியில் 1244 ரன்களும, 36 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.




