இலங்கை கிரிக்கெட்டிற்காக புதிதாக நிர்மாணிக்கப்படும் மைதானம் இது தான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுக்கை பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட நிலப்பரப்பொன்றினை மையமாகக் கொண்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றினை கட்டுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாதுக்கை பகுதியில் அமைந்துள்ள இலங்கை தொலைத்தொடர்பு பலகலைக்கழகத்திற்கு (Sri Lanka Telecom campus) கீழுள்ள குறித்த நிலப்பரப்பிலேயே குறித்த மைதானம் அமைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இருதரப்பினராலும் கைச்சத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.