இலங்கை கிரிக்கெட் தேர்தல் இன்று(21)…

இலங்கை கிரிக்கெட்தேர்தல் இன்று(21) முற்பகல் 10.30 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

தேர்தல் தொடர்பாக எழுத்தாணை கோரி ஒரு தரப்பினர் நீதிமன்றை நாடியிருந்ததுடன் அது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு சமீம் டி சில்வாவும், செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும், உப தலைவர் பதவிக்கு ரவீன் விக்ரமரட்னவும் போட்டியிடுகின்றனர்.