இலங்கை கிரிக்கெட் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் Nic Pothas நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறியுள்ளதாவது, நமது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.
ஆனால், பீல்டிங் முறையில் நாம் சற்று கீழே செல்வது போன்று இருக்கிறது, அதனால் தென் ஆப்பிரிக்க வீரர் Nic Pothas, இதற்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் அவரது பணி தொடரும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நமது இலங்கை அணிக்கு, சிறந்த தொழில்முறை ஆலோசகர் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதி போன்றவற்றையே ஏற்பாடு செய்ய விரும்புகிறோம், அதன்படி இந்த முடிவு இலங்கை அணிக்கு நேர்மறை படியாக அமையும் என கூறியுள்ளார்.
தன்னை இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள Nic Pothas, சிறப்பாக செயல்படுவேன் என கூறியுள்ளார்.
இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இவர் கடைசியாக 2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.