இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஐவரும் மீள் போட்டியிட அனுமதி

நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்து, நிராகரிக்கப்பட்ட ஐந்து பேரையும் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், பிரியன்த ஜயவர்தன மற்றும் கே.வி. சித்ரசிறி ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐந்து பேரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான இந்த தீர்ப்பு கடந்த 18ஆம் திகதி வழக்கப்பட்டது.

எனினும், இந்த அனுமதி வழங்கும்போது நீதிபதிகள் குழாமிற்கு தலைவராக கடமையாற்றிய ஈவா வனசுந்தர, அனுமதி உத்தரவில் கையொப்பமிடாமல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தமையால் அந்த தீர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி எதிர்வரும் 3ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் நிராகரிக்கப்பட்ட குறித்த ஐந்து பேருக்கும் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.