(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பது தொடர்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவர் ஷஷாங் மனோகர் நிராகரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் கடந்த வெள்ளியன்று(02) நடைபெற்ற சந்திப்பின்போது இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.