இலங்கை கிரிக்கெட் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு ஐசிசி கோரிக்கை..

இலங்கை கிரிக்கெட் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நேற்று(02) இடம்பெற்ற ஐசிசியின் வருடாந்த மாநாட்டின் போதே  குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐசிசி மேலும் தெரிவித்துள்ளது.