இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 24 முதல் ஏற்கப்படும்

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நவம்பர் 24ம் திகதி முதல் டிசம்பர் 4ம் திகதி வரை இடம்பெறுமென விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி நடைபெறவுள்ளது.

இன்னும், இலங்கை கிரிக்கட் நிறுவனம் தற்போது இடைக்கால நிர்வாக குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.