இலங்கை கிரிக்கெட் நிறுவனம் FCID இல் முறைப்பாடு..

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான போட்டிகளை ஔிபரப்பு செய்யும் உரிமம் தொடர்பில் கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதானியினுடைய தனிப்பட்ட வௌிநாட்டு கணக்கில் வைப்பிலிடப்பட்டமை குறித்தே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொடுக்கல் வாங்கல்கள், கிரிக்கட் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தலையீட்டில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.