(FASTNEWS|COLOMBO) – ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது
இந்நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆய்வு செய்ய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இருவர் அடங்கிய பாதுகாப்பு குழுவொன்று இன்று பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளனர்.
பாகிஸ்தான் வரும் இலங்கை கிரிக்கெட் குழுவானது கராச்சி, இஸ்லாமபாத் மற்றும் லகூர் பகுதியில் இலங்கை அணியினர் தங்கவுள்ள ஹோட்டல்கள், போட்டி நடைபெறும் மைதானங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கண்காணிக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியானது கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை அணியினர் பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை ஏனைய நாடுகள் தவிர்த்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.