இலங்கை குறுகிய வெற்றியில் மகிழ்ச்சியடைகிறது – எமது எச்சரிக்கை விரைவில் வெடிக்கும்..

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிடும் போது முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்;

“..இலங்கை அரசுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்திருக்கின்றது. போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எவ்வித கண்காணிப்புக்களும் இதுவரைய்ல் இடம்பெறவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இறுதி 10வது நிமிடத்தில் இலங்கைக்கு தற்காலிக வெற்றி கிடைத்தது எனலாம். நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுப்புக்கு சமனாகும்..”

“.. பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர். அவர்களுக்கு நியாயங்கள் கிடைக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்தத கருத்துக்கள் வெறும் கண்துடைப்பே ஆகும். கடந்த டிசம்பர் 31ம் திகதிக்கு முன் தனியார் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது தொடர்பில் மௌனியாக இருக்கிறார்கள்.

நாம் சர்வதேசத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுகின்ற விடயத்தில் தெளிவு படுத்த வேண்டும். மேலும் இனப் படுகொலைக்கு தீர்வு வேண்டும். இலங்கை ஒருபோதும் நிரந்தர வெற்றியினை ஈட்ட முடியும்..”