இலங்கை – சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்…

பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரதும் சிபார்சுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இறுதி சட்டமூலத்திற்கு சட்டமாதிபரின் சான்றுப்படுத்தலினை பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இலங்கை சார்பில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.