எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான சுற்றுப் பயணத்தின் டெஸ்ட் போட்டிகளுக்காக இங்கிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் போட் இனை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என அந்நாட்டு செய்தி நிறுவனமொன்றுக்கு சொந்தமான telegraph.co.uk எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
03 போட்டிகளை கொண்ட குறித்த டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியானது காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதால் அங்குள்ள ஆடுகளமானது சுழற் பந்து வீச்சாளர்களுக்கே பொருந்தும் என்ற மனநிலையில் அந்நாட்டு தேர்வுக் குழு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அநேகமாக மொயின் அலி, ஆதில் ரஷீத், ஜெக் லெஸ்சி மற்றும் டொம் பேஸ் ஆகிய சுழற் பந்து வீச்சாளர்களை களமிறக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்டுவர்ட் போட் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதல் 11 வருடங்கள் தொடர்ச்சியாக அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர்ந்த ஒருநாள் போட்டிகளுக்காக குழாம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Keaton Jennings,Rory Burns,Joe Denly,Joe Root,jonny bairstow,josh butler,Ollie Pope,moeen ali, chris vokes,sam curran, adil rashid, Jack Leach,Dom Bess, james anderson