திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஜோர்ஜிய ஜனாதிபதி Giorgi Margvelashviliகும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.
மேலும், பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையுடனான உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு ஜோர்ஜியா விரும்புவதாக ஜோர்ஜிய ஜனாதிபதி தெரிவித்தார்.