இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது தமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே..

இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது தமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அவற்றை வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின் பேரில் ஜப்பான் விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் எந்த துறைமுகமாக இருப்பினும் அதனை வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கமாட்டோம். இலங்கை துறைமுகங்களின் பாதுகாப்பானது எமது நாட்டு இராணுவத்தினருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இவ்விஜயத்தின் போது, இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையில், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், கலாசார துறைகள் தொடர்பான இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய முன்னாள் பிரதமர்கள் மற்றும் அந்நாட்டு அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(rizmira)