இலங்கை – தென்னாபிரிக்க வீரர்களது Dinner அமைச்சரால் நிறுத்தம்….

எதிர்வரும் 10ம் திகதி ஷங்கரிலா ஹோட்டலில் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரவு விருந்தினை விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு விடுத்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் இவ்வாறான விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கை கிரிகெட் நிறுவனத்திற்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டிருந்ததாகவும் அமைச்சருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனாலேயே குறித்த விருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.