இலங்கை தொடரை கைப்பற்றியதன் மூலம் கனவு நனவாகியுள்ளது – மிஸ்பா

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியதன் மூலம் தங்கள் கனவு நனவாகிவிட்டதாக பாகிஸ்தான் அணி கெப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். இதற்கு முந்தைய மூன்று அணிகள் செய்ய முடியாத இச்சாதனையை தற்போதைய பாகிஸ்தான் அணி செய்ததன் மூலம் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த மூன்று முறை பாகிஸ்தான் அணிக்காக இங்கு வந்து விளையாடியுள்ளேன். அப்போதெல்லாம் நாங்கள் தொடரை இழந்துள்ளோம். ஆனால், தற்போது இந்த தொடரை வென்றதன் மூலம் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.

மேலும், நாங்கள் இலங்கை சுழற்பந்தை திறமையாக எதிர்கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக கொழும்பில் ஆப் ஸ்பின்னருக்கு ஐந்து விக்கெட்டுகள் கொடுத்து விட்டோம். ஆனால், முதல் டெஸ்டில் திறமையாக செயல்பட்டோம்’’ என்று மிஸ்பா குறிப்பிட்டார்.

(riz)