சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் சந்திப்பானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை, ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, இலங்கை மற்றும் மற்றைய நாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஈக்குவடோர் (8-9 நவம்பர்), பின்லாந்து (9-10 நவம்பர்), மொனாக்கோ (11, 14 நவம்பர்), இலங்கை (15-16 நவம்பர்), நமீபியா (18, 21 நவம்பர்), துர்க்மெனிஸ்தான் (21-22 நவம்பர்), ஆர்மேனியா (23-24 நவம்பர்), கேப் வெர்டே (24-25 நவம்பர்) ஆகிய நாடுகளுக்கான மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சித்திரவதை மற்றும் மற்றைய கொடுமைகள், மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டனை போன்றவை தொடர்பிலேயே குறித்த இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.