இலங்கை நாணயத்தின் பெறுமதி, 0.82% இனால் வீழ்ச்சி…

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82% இனால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று(30) புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82%) வீழ்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99%) வீழ்ச்சியடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.