இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி – ஐசிசி விசாரணை…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று(16) இடம்பெற்ற போட்டியில் நடந்த சர்ச்சை மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

குறித்த போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, சுதந்திர கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எவ்வாறாயினும், நேற்று(16) இடம்பெற்ற போட்டியின் போது பங்களாதேஷ் அணி வீரர்களின் தரக்குறைவான செயல் காரணமாக போட்டி சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தது.

இந்நிலையில் , போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி பாம்பு நடனம் ஆடி தமது வெற்றியினை மைதானத்தில் கொண்டாடியதன் பின்னர் , ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

-Rishma