தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவுள்ளது.
இதில் பங்களாதேஷ்கான உயர்ஸ்தானிகர் ரீயாஸ் அம்துல்லா Mr. Riaz Hamidullah விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் பங்களாதேஷ் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கை குறித்தும் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் தெளிவுப்படுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.