இலங்கை – பிலிப்பின்ஸ் ஜனாதிபதிகள் இடையே இன்று(16) சந்திப்பு…

பிலிப்பின்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்குள்ள மெனிலா நகரில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

அத்துடன், பிலிப்பின்ஸின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரேவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(16) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஜனாதிபதி நேற்று(15) இரவு பிலிப்பைன்ஸை சென்றடைந்தார். பிலிப்பின்ஸின் மெனிலா நகரில் உள்ள நினோய் அகினோ விமான நிலையத்தில் ஜனாதிபதியை, அந்த நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.