இலங்கை அணியினர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்றனர்.
அங்கு அவுஸ்திரேலியாவுடன் இருபதுக்கு 20 போட்டிகள் மூன்றில் பங்கேற்கவுள்ளனர்.
மேற்குறித்த போட்டிக்கான அணி விபரத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோடு, அதில் ஒரு போட்டி கர்டீனியா பாக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்குறித்த கர்டீனியா பாக் மைதானமானது, சர்வதேச ரீதியில் 11வது மைதானமாக உள்வாங்கப்பட்டுள்ளமை விசேடமானதாகும்.
அவுஸ்திரேலியா உடனான இருபதுக்கு 20 போட்டி கால அட்டவணை.