எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் மேலும் கூறுகையில்,
உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜனட் எலன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் பல நாடுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் அதில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.
அதன்படி நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே, உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, ஜூன் நடுப்பகுதி வரை நாட்டுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் கூறினார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத…
பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில்…
சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதை 2020 ஆம் அண்டு முதல் முற்றாக நிறுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் விஷேட தீர்மானத்தின் பெயரிலேயே…