இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று(26) கடிதம் ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
இன்று (26) முதல் 5 வருடங்களுக்கு இவர் தலைவராக கடமையாற்றுவர் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.