இலங்கை மருத்துவ சபை புதிய அதிகாரிகள் குழுவுடன் இன்று கூடுகிறது..

தேர்தல் மூலம் தெரிவான புதிய அதிகாரிகள் குழுவுடன், இன்று(26) பிற்பகல் 2 மணிக்கு இலங்கை மருத்துவ சபை முதல் முறையாக கூடவுள்ளது.

இதன்போது, இம்முறை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் 4 பேர் உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள உள்ளனர்.

அத்துடன் மருத்துவ சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக, இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கொல்வின் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

#rishma