இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(23) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணியிலும் டினேஸ் சந்திமால் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக தனுஷ்க குணதிலக்க உள்வாங்கப்பட்டுள்ளார் என்றும் ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் அகில தனஞ்சயவுக்கு பதிலாக லக்சான் சந்தகன் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு பதிலாக ஸ்டுவர்ட் போர்ட் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோ ஆகியோர் இணைக்கப்படவுள்ளனர்.