இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான 20க்கு இருபது போட்டி ஒத்திவைப்பு..

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் உலக பதினொருவர் கிரிக்கெட் அணிக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி நடைபெற இருந்த இருபதுக்கு இருபது தொடக்க கிரிக்கெட் போட்டியினை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபைஅறிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்றவற்றினால் பதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு நிதி திரட்டும் முகமாக குறித்த போட்டியினை இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது.

எனினும், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடி வரும் நிலையில் அவர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)