இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன..

சிம்பாப்வேயில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கட் தொடரில் இன்று(16) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று விளையாட்டு விமர்சன இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுடனான தொடர் தோல்வியை மனதில் இருத்தி மேற்கிந்திய தீவுகளின் அணி மாற்றம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கை அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புகள் இல்லை.

இத்தொடரின் சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே அணி இன்றும் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் போட்டி நடைபெறவுள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு குறிப்பாக சுவிங் வகையான பந்து வீச்சுகளுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

மேலும் போட்டியின் பிற்பகுதி இடம்பெறும்போது இடிமின்னல் தாக்கம் காணப்படும் என்று கூறப்படுகின்ற போதும், மழை பெய்யும் என்று தெரிவிக்கப்படவில்லை.