இலங்கை மின்சார சபையின் பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால நேற்று(26) மாலை பதவி விலகியதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.
அவரது பதவி விலகல் கடிதம் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கையளிக்கப்பட்டதையடுத்தே பதில் தலைவராக டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.