இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனியார் மயப்படுத்துவது குறித்த எவ்வித யோசனையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை மின்சாரசபை குறிப்பிடத்தக்களவு இலாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும், கடுமையான வறட்சி நிலையிலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.