இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பு…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று(15) சுகயீன விடுமுறை அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இந்த அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், எந்தவொரு மின்சாரத் தடையும் நாட்டில் ஏற்பட மாட்டாது எனவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அச்சபை மேலும் அறிவித்துள்ளது.

(rizmira)