இலங்கை மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும் – அ.தி.மு.க எம்.பி

மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து பேசிய அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன், இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா மீனவர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார் என்றார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டுள்ளார்.
பின்னர் பேசிய அதிமுக உறுப்பினர் முத்துக்கருப்பன், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை காப்பாற்ற, இலங்கை கடற்படையினர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் 96 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 68 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் 82 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, திருப்பி கொடுக்கப்படாமல் உள்ளன. அதனை திருப்பி கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.