அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கிடையிலான 70 வருட நட்புறவினை முன்னிட்டு அவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.