இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணியுடனான தொடருக்கான பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ரி 10 லீக் போட்டிகளின் போது ஒழுக்க விதிகளை மீறியதாக அவிஷ்க குணவர்த்தன மீது சர்வதேச கிரிக்கட் பேரவை குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.