இலங்கை விஜயமாகிறார் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா.

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா (Irina Bokova) இன்று ஞாயிற்றுக்கிழமை(14) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் இரினா பொகோவா, இலங்கைக்கு முதல் முறையாக விஜயம் மேற்கொள்கின்றார்.

2030ஆம் ஆண்டில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து இரினா பொகோவா கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.