குறிபார்க்கும் பெண்ணொருவர் நேற்று(02) அவரது முகநூலில் பதிவு செய்திருந்த பதிவானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
பாகிஸ்தான் அணியினை முதல் டெஸ்ட் போட்டியிலேயே தோற்கடித்து இலங்கை அணியானது விசேட வெற்றியினை தம்வசப்படுத்தியமை தொடர்பிலேயே குறித்த பதிவும் இடம்பெற்றுள்ளது எனலாம்.
குறித்த பதிவில் தெரிவிக்கப்படுவதாவது;
“தினேஷ் சந்திமால் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்னர் என்னிடம் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அணிக்கு அவரே தலைமைப் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். இன்றிலிருந்து இலங்கை அணி வெற்றிகளையே கடக்கும் என நான் தெரிவித்தேன். எனது விசேட நன்றியினை தயாசிறி ஜயசேகர அமைச்சருக்கும் ஏஸ்லி டி சில்வா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சந்திமாலை என்னிடம் அனுப்பியது இவர்கள் தான்..” என பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் சந்திமாலும் குறித்த பெண்ணுடன் இருந்த புகைப்படங்களையும் அவர் முகநூலில் பதிவு செய்திருந்தார்.
டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமாலை குறித்த பெண்ணிடம் அனுப்பியமைக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஏஸ்லி டி சில்வா ஆகியோருக்கே ஆகும்.
குறித்த பெண்ணின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கு முன்னரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஏஸ்லி டி சில்வா ஆகியோர் இவ்வாறு வீரர்களை, அணித் தலைவர்களை குறித்த பெண்ணிடம் அனுப்புவது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணினால் பதிவிடப்பட்ட முகநூல் பதிவு;

(rizmira)